செய்திகள்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

Published On 2021-11-22 10:01 GMT   |   Update On 2021-11-22 10:01 GMT
கலெக்டர் எங்கள் பகுதியில் ஆய்வு செய்து நூலகம், சிறுவர் விளையாட்டு அரங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்று மனு கொடுத்தனர்.

திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர். திருப்பூர் வீரபாண்டி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். 

பல்லடம் பொங்கலூர் சின்னகாட்டுப்பாளையம் கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால், சாலைகள் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. 

கலெக்டர் எங்கள் பகுதியில் ஆய்வு செய்து  நூலகம், சிறுவர் விளையாட்டு அரங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேப்போல் பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். 
Tags:    

Similar News