செய்திகள்
திருப்பூர் பழைய பேருந்து நிலைய முகாமில் இளம்பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் 9-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-11-21 12:14 GMT   |   Update On 2021-11-21 12:14 GMT
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோயின் தாக்கம் கடந்த 2அலைகளின் போதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்களை நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இன்று 9-ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்   பல்வேறு மையங்களில்  நடைபெற்றது. மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள்,பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலும் கொரோனா தடுப்பூசி மருந்து இலவசமாக செலுத்தப்பட்டது.  



இப்பணியில் பல்வேறு துறைகளை சார்ந்த  பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகரில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு முகாம் பணியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
Tags:    

Similar News