செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு 29 ஆயிரம் கன அடியாக குறைப்பு

Published On 2021-11-20 09:09 GMT   |   Update On 2021-11-20 09:09 GMT
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 29,494 கன அடியாக குறைக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மப்பள்ளி அணையில் இருந்து நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுள்ள நீர், பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதி, மழை நீர் போன்றவைகளால் பூண்டி சத்யமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் மழை நின்றதால் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 29,719 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

இதனால் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 29,494 கன அடியாக குறைக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 34.41 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது 2953 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
Tags:    

Similar News