செய்திகள்
ரெயில்வே நுழைவு பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கியிருப்பதை படத்தில் காணலாம்.

ஊத்துக்குளி பகுதியில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை 44 மில்லி மீட்டர் பதிவு

Published On 2021-11-17 11:01 GMT   |   Update On 2021-11-17 11:01 GMT
ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஊத்துக்குளி:

ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் செங்கப்பள்ளி, காடபாளையம், பொன்னாபுரம், கொடியம்பாளையம் நால்ரோடு, ஊத்துக்குளி ரயில் நிலையம், திம்மநாயக்கன் பாளையம், பெட்டிக்கடை பகுதிகளில் கனமழை பெய்தது. 

2 மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிக பட்சமாக திருமூர்த்தி ஆய்வு மாளிகையில் 129 மி.மீட்டரும், அணைப்பகுதியில் 77மி.மீட்டர் மழையும், ஊத்துக்குளியில் 44மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

இதன் காரணமாக பொதுமக்கள் இப்பகுதியை கடக்க ரெயில்வே பாலத்தின் மீது ஏறி அபாயகரமாக ரெயில் ரோட்டை கடந்து பாலத்தின் மறுபுறம் சென்றனர். 

மேலும் கழிவு நீரும் கலந்து செல்வதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊத்துக்குளி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News