செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இன்று 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Published On 2021-11-14 02:25 GMT   |   Update On 2021-11-14 02:25 GMT
அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துவருகிறது.
சென்னை:

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத மக்கள், பிறகு கூட்டம் கூட்டமாக போட்டுக்கொள்ள தொடங்கினர். இதனால், பொது மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா முகாம்களுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது.  

தமிழகத்தில் ஏற்கனவே 7 கட்டங்களாக முகாம் நடைபெற்ற நிலையில், இன்று 8-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது.

 

அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துவருகிறது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News