செய்திகள்
மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மழை பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை

Published On 2021-11-07 09:12 GMT   |   Update On 2021-11-07 09:12 GMT
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கன மழையின் காரணமாக நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நான்கு மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் மற்றும் நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கன மழையின் காரணமாக நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும்,  சேதமடைந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் மற்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் பொழுது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கவும், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கவும், மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அடிப்படை தேவைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News