செய்திகள்
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்-செல்வராஜ் எம்.எல்.ஏ உறுதி

Published On 2021-11-07 09:05 GMT   |   Update On 2021-11-07 09:05 GMT
பொதுமக்களை மும்மூர்த்தி நகர் நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டில் கருப்பராயன் நகர் உள்ளது. இங்குள்ள 5 வீதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் 5 வீதிகளில் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழி இல்லை. குடியிருப்பு உருவாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில் மழைகாலங்களில் வெளியேற வழியின்றி அங்கு தேங்கி வீடுகளுக்கு புகுந்துவிடுகிறது.
 
வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை அவ்வப்போது மாநகராட்சி லாரி மூலம் அப்புறப்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைக்கு அப்பகுதியின் 5 வீதிகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள் கழிவுநீர் மற்றும் மழைநீரும் கலந்தது.

அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை மும்மூர்த்தி நகர் நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தெற்கு எம்.எல்.ஏ.செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று தேங்கியிருந்த நீரை அருகிலுள்ள தனியார் இடத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதாக எம்.எல்.ஏ. செல்வராஜ் உறுதியளித்தார்.

260 அடி நீளத்துக்கு பைப் மூலமாக கழிவுநீரை தனியார் இடத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதன் மூலம் கழிவுநீர் மழைகாலங்களில் தேங்காத அளவுக்கு இருக்கும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
Tags:    

Similar News