செய்திகள்
தண்ணீர் புகுந்த பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆய்வு செய்த காட்சி.

திருப்பூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Published On 2021-11-05 09:17 GMT   |   Update On 2021-11-05 09:17 GMT
நகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் தங்களது குறைகளை கமிஷனரிடம் கூறியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையின் காரணமாக, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 2,வார்டு 19, மும்மூர்த்தி நகர், கருப்பராயன் கோவில் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்த பகுதிகளை நகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் தங்களது குறைகளை கமிஷனரிடம் கூறியுள்ளனர். 

அதனைதொடர்ந்து, அங்கிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News