செய்திகள்
வைகை அணை

தொடர்மழையால் 62 அடியை எட்டும் வைகை அணை நீர்மட்டம்

Published On 2021-10-31 04:06 GMT   |   Update On 2021-10-31 04:06 GMT
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. வருகிற 35 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையாலும் முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

71 அடி உயரமுள்ள அணையில் 69 அடி வரை நீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 69 அடியை எட்டி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் முதல் போக சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 61.71 அடியாக உள்ளது. 2078 கன அடி நீர் வருகிறது. 1369 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 144 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் பாசனத்துக்கும், 44 அடி உபரியாகவும் திறக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அணை முழு கொள்ளளவில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. வருகிற 35 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பெரியாறு 2.4, தேக்கடி 3, கூடலூர் 5.7, சண்முகாநதி அணை 4.3, உத்தமபாளையம் 4.1, வைகை அணை 1.2, மஞ்சளாறு 8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News