செய்திகள்
கோப்புபடம்.

லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்

Update: 2021-10-30 07:47 GMT
அரசு பணியாளர்கள் தங்களது பணியை செய்ய லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:

அரசு அலுவலகம், உள்ளாட்சி அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்களில் அரசு பணியாளர்கள் தங்களது பணியை செய்ய லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., 94450 - 48880, 0421 - 2482816 என்ற எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். 
 
மேலும்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எண்:40, ஆசர் நகர் 2வது வீதி, எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம், அவிநாசி ரோடு, திருப்பூர் என்ற முகவரியில் நேரில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News