செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு - அமைச்சர் தகவல்

Published On 2021-10-28 07:58 GMT   |   Update On 2021-10-28 07:58 GMT
பல்வேறு வங்கிகள் சார்பில் 5,997 பேருக்கு ரூ.315 கோடியே 83 லட்சத்தில் வங்கி கடனுதவியை வாடிக்கையாளர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமை திருப்பூரில் நடத்தியது. 

முகாமுக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 361 வணிக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 

வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட கடன் குறியீட்டுக்கு மேல் கடனுதவி வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியது. 2022 - 23-ம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்து 169 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த முகாமில் மக்களுக்கு விவசாய கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன், கல்விக்கடன், வீட்டுவசதிக்கடன், வாகன வசதிக்கடன், தனிப்பட்ட நுகர்வோர் கடன் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வங்கி தொடர்பான விவரங்கள் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விளக்கங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

பல்வேறு வங்கிகள் சார்பில் 5,997 பேருக்கு ரூ.315 கோடியே 83 லட்சத்தில் வங்கி கடனுதவியை வாடிக்கையாளர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
Tags:    

Similar News