செய்திகள்
கோப்புபடம்.

லஞ்சத்தை ஒழிக்க மின் அலுவலகங்களில் ‘பாக்கெட் மணி’ பதிவேடு வைக்க உத்தரவு

Published On 2021-10-28 07:04 GMT   |   Update On 2021-10-28 07:04 GMT
கணக்கில் வராத பணத்துடன் பிடிபடும் அதிகாரிகள், வீட்டு செலவுக்காக எடுத்துவந்த பணம் என்ற பதிலை முன் வைக்கின்றனர்.
திருப்பூர்:

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது அரசுபணியாளர்கள் லஞ்சம், பரிசு பொருட்கள் வாங்குவதை தடுக்கும்வகையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். கணக்கில் வராத பணத்துடன் பிடிபடும் அதிகாரிகள், வீட்டு செலவுக்காக எடுத்துவந்த பணம் என்ற பதிலை முன் வைக்கின்றனர். 

இதுபோன்ற பதில்களை காரணம் காட்டி தப்ப முடியாதபடி ‘பாக்கெட் மணி’ எனும் பதிவேட்டை ஒவ்வொரு அலுவலகத்திலும் வைக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மின் அலுவலகங்களிலும் ‘பாக்கெட் மணி’ பதிவேடு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலக பணியாளர், அலுவலர்கள், அதிகாரிகள், அன்றாடம், பணிக்கு வந்ததும் தங்கள் வசம் உள்ள பணம் குறித்த தகவலை பதிவு செய்து கையொப்பமிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News