செய்திகள்
வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

வங்கிகள் சார்பில் திருப்பூரில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2021-10-27 11:34 GMT   |   Update On 2021-10-27 11:34 GMT
முகாமில் மத்திய, மாநில அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் ஆகியன சார்பில் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. 

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெற்ற  இந்த முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மத்திய, மாநில அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனைகள்  வழங்கப்பட்டது. 

முகாமில் கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்குவதற்காக அரசு மற்றும் வங்கித்துறையை சார்ந்தவர்களுக்கு 50 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. 

மேலும் விவசாயக்கடன், சிறு, குறு தொழிற்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் மற்றும் அடமானக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்கள் குறித்து விரிவான தகவல்கள் அளிக்கப்பட்டது. 

இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News