செய்திகள்
கோப்புபடம்

கட்டண நிலுவையை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க தாமதிக்ககூடாது - தனியார் பள்ளிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2021-10-27 09:24 GMT   |   Update On 2021-10-27 09:24 GMT
சான்றிதழ் கோரி விண்ணப்பித்து ஒரு வார காலத்துக்குள் கிடைக்கவில்லை என்றால் அலுவலர்களின் செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கட்டண நிலுவையை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க தாமதிக்க கூடாது என்று மாவட்ட  கலெக்டர் வினீத்  அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில தனியார்பள்ளிகள் கட்டண நிலுவை மற்றும் பிற காரணங்களுக்காக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தாமதப்படுத்தி வருவதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி எந்த ஒரு பள்ளியும் மாணவர்கள் கோரும் சான்றிதழ்களை வழங்க மறுப்பதோ, காலம் தாழ்த்துவதோ கூடாது.

அவ்வாறு புகார் வரும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சான்றிதழ் கோரி விண்ணப்பித்து ஒரு வார காலத்துக்குள் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட அலுவலர்களின்  செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

புகார்களை வட்டாரக் கல்வி அலுவலர்: 90038-67902, மாவட்டக் கல்வி அலுவலர் (திருப்பூர்) : 94424-26525, மாவட்டக்கல்வி அலுவலர் (தாராபுரம்) : 98427-98855, மாவட்டக் கல்வி அலுவலர் (பல்லடம்) : 94864-11755, மாவட்டக் கல்வி அலுவலர் (உடுமலை) : 86678-87400, முதன்மைக் கல்வி அலுவலர் (திருப்பூர்) : 99653-15628 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 
Tags:    

Similar News