செய்திகள்
பெட்ரோல் - டீசல்

கரூரில் ரூ.100-ஐ தாண்டிய டீசல் - ரூ.105-ஐ நெருங்கும் பெட்ரோல்

Published On 2021-10-26 10:12 GMT   |   Update On 2021-10-26 10:12 GMT
கரூரில் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. பெட்ரோல் விலை ரூ.105-ஐ நெருங்குகிறது.
கரூர்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு நிர்ணயம் செய்வதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கிறது. தற்போது தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

அந்த வகையில் கரூரில் சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் பெட்ரோல் விலை சதத்தை தாண்டியது. அன்றைய தினம் பெட்ரோல் ரூ.100.08-க்கு விற்பனையானது.

கடந்த 10-ந்தேதி ரூ.101.82 காசுக்கும், 13-ந்தேதி ரூ.102.08 காசுக்கும், 16-ந்தேதி ரூ.102.99 காசுக்கும், கடந்த 17-ந்தேதி ரூ.103.29 காசுக்கும், 22-ந் தேதி ரூ.103.90 காசுக்கும், 23-ந் தேதி ரூ.104.20 காசுக்கும், 24-ந்தேதி ரூ.104.81 காசுக்கும் பெட்ரோல் விற்பனையானது. நேற்று விலை மாற்றமின்றி ரூ.104.81 காசுக்கு விற்பனையானது.

அதேபோல் டீசல் கடந்த 13-ந்தேதி ரூ.97.91 காசுக்கும், 16-ந்தேதி ரூ.98.91 காசுக்கும், 17-ந்தேதி ரூ.99.24 காசுக்கும், 22-ந் தேதி ரூ.99.90 காசுக்கும், 23-ந் தேதி ரூ.100.24 காசுக்கு விற்பனையாகி முதல் முறையாக டீசல் ரூ.100-ஐ தாண்டியது. தொடர்ந்து 24-ந் தேதி ரூ.100.90 காசுகளாக உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று விலை மாற்றமின்றி ரூ.100.90 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ.101-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.
Tags:    

Similar News