செய்திகள்
பெருஞ்சாணி அணை

குமரியில் மழை நீடிப்பு- அடையாமடையில் 79 மி.மீ. பதிவு

Published On 2021-10-26 10:09 GMT   |   Update On 2021-10-26 10:09 GMT
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43 அடியாக இருந்தது. அணைக்கு 479 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்கள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருகிறது.

மாவட்டம் முழுவதும் நேற்றும் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அடையாமடை பகுதியில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அங்கு அதிகபட்சமாக 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

நாகர்கோவிலில் நேற்றிரவு விட்டு விட்டு மழை பெய்தது. பூதப்பாண்டி, கொட்டாரம், மயிலாடி, கோழிப்போர்விளை, ஆரல்வாய்மொழி, மாம்பழத் துறையாறு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து மிதமான அளவு தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43 அடியாக குறைந்ததையடுத்து அணை மீண்டும் மூடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43 அடியாக இருந்தது. அணைக்கு 479 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைநீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது. அணைக்கு 757 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொய்கை, மாம்பழத்துறையாறு அணைகள் ஒரு மாதமாக கொட்டிய மழைக்கு பிறகும் நிரம்பவில்லை. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை கடந்த 15 நாட்களாக முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-4.2, பெருஞ்சாணி-11.8, சிற் றாறு-1-2.8, பூதப்பாண்டி-20.2, களியல்-3.2, கன்னிமார்- 37.2, கொட்டாரம்-11.4, குழித்துறை-5.8, மயிலாடி-5.2, நாகர்கோவில்- 17.2, சுருளோடு-15.4, தக் கலை-15.2, குளச்சல்-2.4, இரணியல்-6.4, பால மோர்-18.4, மாம்பழத்துறையாறு-44, ஆரல்வாய்மொழி- 25, கோழிப்போர்விளை-14, அடையாமடை-79, குருந்தன்கோடு-26.8, முள்ளாங்கினாவிளை-9.6, ஆணைக்கிடங்கு-59.4.

Tags:    

Similar News