செய்திகள்
கோப்புபடம்

மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை - கலெக்டரிடம் எம்.பி., மனு

Published On 2021-10-26 08:52 GMT   |   Update On 2021-10-26 08:52 GMT
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலைகளில் வழிந்தோடிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
 
திருப்பூர் மாநகரில் மழைநீர் வடிந்து செல்ல போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத்துக்கு, மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலைகளில் வழிந்தோடிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக திருப்பூர் வடக்குப் பகுதியில் இருந்து வரும் மழை நீர் தனலட்சுமி மில்லுக்கு எதிரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் வழியாக பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து பிரதான நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்துக்கு செல்கிறது. 

இதனால் கிழக்கு, மேற்கு பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிப்பதுடன், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. 

எனவே இதற்குத் தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்கவும், மாநகரில் மழை நீர்வடிந்து செல்ல போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News