செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் வழியாக சென்னை - மங்களூரு ரெயில் இயக்கம்

Published On 2021-10-26 04:44 GMT   |   Update On 2021-10-26 04:44 GMT
சென்னை எழும்பூர் - மங்களூரு ரெயில் ஊத்துக்குளி, திருப்பூரை தொடர்ந்து பீளமேடு, வடகோவை நிலையங்களில் நின்று செல்லும்.
திருப்பூர்:

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சிறப்பு ரெயில் (06159) இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஈரோடு, கோவை, சேலம், பாலக்காடு இடையே இயங்கி வந்த பாசஞ்சர் ரெயில்கள் கொரோனா காரணமாக 2020 மார்ச்க்கு பின் ஒன்றரை ஆண்டுகளாக இயங்கவில்லை.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர், கோவைக்கு ரெயிலில் பலரும் தினமும் பணிக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாசஞ்சர் ரெயில்கள் உதவிகரமாக இருந்தது. இந்த ரெயில் இயங்காததால் பஸ்சில் பயணித்து கொண்டிருந்தனர். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட் டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் - மங்களூரு ரெயில் இயக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி செல்லும் மங்களூரு ரெயில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் வரும்போது ஊத்துக்குளியில் காலை 9:05 மணிக்கு நிற்கும். 

10 மணிக்கு பீளமேட்டிலும், 10:15 க்கு கோவை வடக்கு  நிலையத்திலும் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், எர்ணாகுளம், மயிலாடுதுறை , கோவை, திருச்சி, பாலக்காடு ரெயில்கள் ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் ஏற்னேவே நின்று செல்கின்றன. திருப்பூரை கடந்து கோவை செல்கின்றன. 

சென்னை எழும்பூர் - மங்களூரு ரெயில் ஊத்துக்குளி, திருப்பூரை தொடர்ந்து பீளமேடு, வடகோவை நிலையங்களில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் ஊத்துக்குளி பகுதி ரெயில் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News