செய்திகள்
ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து

Update: 2021-10-25 20:57 GMT
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
சென்னை:

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அந்த வகையில், தமிழகத்தில் இருந்து நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான் உள்பட திரைப்பட கலைஞர்கள் விருதுகளைப் பெற்றனர்.

இந்நிலையில், தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், இந்திய சினிமாவில் பங்களித்ததற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் மதிப்புமிக்க தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட கலைஞர்களை வாழ்த்துகிறேன். தமிழகத்துக்கு இது பெருமையான தருணம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News