செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு மருத்துவமனையில் வீல் சேர் இயக்க ஆளில்லாததால் நோயாளிகள் கடும் பாதிப்பு

Published On 2021-10-25 09:09 GMT   |   Update On 2021-10-25 09:09 GMT
வீல் சேரை இயக்க மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் 1500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டு மற்றும் பரிசோதனைக்கு செல்ல 'வீல் சேர்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீல் சேரை இயக்க மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கு மாறாக தனியார் ஒப்பந்த பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் வாயிலாக வீல் சேர் இயக்கப்படுகிறது.

அதற்கு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவதாக புகாரும் எழுகிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 
Tags:    

Similar News