செய்திகள்
பல்லடம் அருகே சுகாதார வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் காட்சி.

பல்லடம் அருகே சுகாதார வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் - பொதுமக்கள் பாதிப்பு

Published On 2021-10-25 08:29 GMT   |   Update On 2021-10-25 08:29 GMT
சுகாதார வளாகத்தில் கழிவுநீர் தேங்கும் தொட்டி சிறியதாக கட்டப்பட்டுள்ளதால் அடிக்கடி கழிவு நீர் நிரம்பி, அருகே உள்ள ஓடை பகுதியில் செல்கிறது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ளது சுக்கம்பாளையம் கிராம ஊராட்சி. இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுக்கம்பாளையம் கிராமத்தில் காலனி பகுதியில் சுகாதார வளாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 

அப்போது கழிவுநீர் தொட்டி சிறியதாக கட்டப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கழிவு நீர் நிரம்பி அருகில் உள்ள ஓடை பகுதியில் செல்கிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சுக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

சுகாதார வளாகத்தில் கழிவுநீர் தேங்கும் தொட்டி சிறியதாக கட்டப்பட்டுள்ளதால் அடிக்கடி கழிவு நீர் நிரம்பி, அருகே உள்ள ஓடை பகுதியில் செல்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஊருக்குள் நுழைவாயில் பகுதியில் இந்தப் பிரச்சினை இருப்பதால் சுக்கம்பாளையம் வரும் பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.

இதுகுறித்து சுக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீர் தேங்கும் தொட்டியை பெரிதுபடுத்த வேண்டும்.

இல்லையென்றால் அடிக்கடி கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் வெளியே செல்லாமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News