செய்திகள்
கோப்புபடம்

பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாட புத்தகம் வினியோகம்

Published On 2021-10-25 04:40 GMT   |   Update On 2021-10-25 04:40 GMT
இரண்டாம் பருவ பாடபுத்தங்கள் திருப்பூருக்கு வந்தடைந்தன. இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழகத்தில் 1 முதல் 8-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முப்பருவ தேர்வு முறை மற்றும் சமச்சீர் கல்வி திட்டம் அமலில் உள்ளது. முதல் 3 மாதங்களுக்கு முதல் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும்.

அதன்பின் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடம் நடத்தப்படும். ஜனவரி முதல் மார்ச் வரை மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படும்.

இந்தாண்டு முதல் பருவத்துக்கான புத்தகங்கள் வழங்கி ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டாம் பருவ பாடபுத்தங்கள் திருப்பூருக்கு வந்தடைந்தன. இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து அனைத்து தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் இரண்டாம் பருவப் பாடங்களை நேரடி வகுப்பில் படிக்கும் உற்சாகத்தில் மாணவர்கள் புத்தங்களை வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News