செய்திகள்
படகு சவாரி செய்யும் பொதுமக்கள்.

அமராவதி அணையில் படகு சவாரி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2021-10-24 07:23 GMT   |   Update On 2021-10-24 07:23 GMT
அமராவதி நகர் வேலன் மகளிர் சுய உதவிக் குழுவால் கடந்த 10 வருடங்களாக படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது.
உடுமலை:

உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. தமிழக அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலம். இங்கு இந்திய அளவில் பிரபலமான முதலைப் பண்ணை, மீன் பண்ணை, அமராவதி அணை, அணைப் பகுதியில் அழகிய பூங்காஅமைந்துள்ளது. 

சிறுவர்களுக்கான பூங்காவும் உள்ளது. மேலும் அணைப் பகுதியில் கள்ளிச்செடி பூங்கா உள்ளது. விடுமுறை நாட்களில் அன்றாடம் ஏராளமானோர் இங்கு வந்து போகும் நிலையில் அமராவதி அணைக்குள் படகு பயணம் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
 
அமராவதி நகர் வேலன் மகளிர் சுய உதவிக் குழுவால் கடந்த 10 வருடங்களாக படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஒரு படகில் 8 பேர் செல்லலாம். ஒரு நபருக்கு ரூ.50கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லைப் ஜாக்கெட்டுடன் பாதுகாப்பான படகு சவாரி அனுபவமுள்ள ஓட்டுனரால் இந்த படகு இயக்கப்படுகிறது.

கொரோனாவால் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவில் அமைந்துள்ள அமராவதி அணையை முழுமையாக பார்த்து ரசிக்கவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
Tags:    

Similar News