செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் சந்தித்த போது எடுத்தப்படம்.

முதல்வரின் அறிவிப்புகளால் தொழில்துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வரும் - ஏ.இ.பி.சி., தலைவர் தகவல்

Published On 2021-10-22 08:09 GMT   |   Update On 2021-10-22 08:09 GMT
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் சிறப்பம்சமாக 2030-ம் ஆண்டுக்குள் ரூ.7.50 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக ஏற்றுமதியை உயர்த்த இலக்கு நிர்ணயித்து அதற்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
திருப்பூர்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக(ஏ.இ.பி.சி.,) அகில இந்திய தலைவர் சக்திவேல் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். 

அப்போது அவர் முதல்-அமைச்சரிடம் கூறியதாவது:

தமிழகம் இந்தியாவிலேயே தொழில்துறையில் முதல் மாநிலமாக உருமாறுவதற்கு அனைத்து முனைப்புடன் பணியாற்றி வருவதற்கு பாராட்டுகள். 

மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்படும் என அறிவிப்பு, தமிழ்நாடு ஏற்றுமதி கொள்கை வெளியீடு, நிறுவனங்களுக்கான ஏற்றுமதியாளர்களின் கையேடு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் குறைகளை களைய ஓய்வுபெற்ற செயலர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது.

தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் சிறப்பம்சமாக 2030-ம் ஆண்டுக்குள் ரூ.7.50 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக ஏற்றுமதியை உயர்த்த இலக்கு நிர்ணயித்து அதற்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. 

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய வணிகவரி கோட்டம் உருவாக்கி தொழில்துறையினரின் சிரமத்தை குறைத்தது. கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு. 

இதுபோல் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், வெளிநாட்டு முதலீடுகள், தொழில் பூங்காக்கள் போன்ற அறிவிப்புகள் மூலம் சில ஆண்டுகளில் தொழில்துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வரும். இதனை வரவேற்கிறோம் என்றார்.
Tags:    

Similar News