செய்திகள்
கொரோனா வைரஸ்.

திருப்பூரில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் - பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள்

Published On 2021-10-22 07:23 GMT   |   Update On 2021-10-22 07:23 GMT
நாளை நடைபெறவுள்ள முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
 
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை 23 - ந்தேதி (சனிக்கிழமை)  காலை முதல் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. கமிஷனர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கமிஷனர் கூறுகையில்,கடந்த மாதம் 12 - ந்தேதி நடந்த முகாமில் 41,391 பேர், 
19 - ந் தேதி முகாமில் 32,611 பேர், 26 - ந்தேதி முகாமில் 36,452 பேர், அக்டோபர் 
3 -ந்தேதி நடந்த முகாமில் 30,494 பேர், 10 - ந்தேதி முகாமில் 28,270 பேர் 
பங்கேற்றனர். தற்போது இரண்டாம் தவணை செலுத்த வேண்டியோர் 65,536 பேர் உள்ளனர். 

நாளை நடைபெறவுள்ள முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என்றார்.
Tags:    

Similar News