செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்குமார்.

பல்லடம் தொழில்நுட்பநெசவு பூங்காவில் முதலீட்டாளர் திடீர் போராட்டம்

Published On 2021-10-21 06:58 GMT   |   Update On 2021-10-21 06:58 GMT
10 ஆண்டு காலமாக தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு ஷேரை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடத்தில் பல்லடம் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா உள்ளது. இந்த நிலையில் பூங்காவின் முதலீட்டாளர்களில் ஒருவரான ராஜ்குமார் என்பவர் பூங்கா அலுவலகத்தில் பாய் மற்றும் தலையணையோடு திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 

பல்லடம் உயர் தொழில் நுட்பு நெசவு பூங்காவில் 2003 - ம் ஆண்டு முதல் முதலீட்டாளர் ஆனேன். அதைத்தொடர்ந்து கட்டட குழு உறுப்பினர், 2006 - ம் ஆண்டு முதல் தொழில் முனைவர், 2010 - ம் ஆண்டில் இயக்குநர், அதைத்தொடர்ந்து வளர்ச்சி கமிட்டி கன்வினர், கூட்டு கமிட்டி உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை பூங்கா வளர்ச்சிக்காக ஏற்று செயல்பட்டுள்ளேன். 

என்னுடைய 10 ஏக்கர் நிலத்திற்கான பணம் ரூ.18 கோடி உடனடியாக தரவேண்டும்.மேலும்அப்பேரல்ஸ் நிறுவனங்களிடம் ஏ.ஆர்.எப் பணத்தை உடனடியாக வசூலிக்க வேண்டும்.10 ஆண்டு காலமாக தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு ஷேரை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும். 

அப்பேரல் நிறுவனங்களுக்கு ரூ.15 கோடிக்கு எடுக்க வேண்டிய ஷேரை அதிகார துஷ்பிரயோகம் செய்து ரூ.26 கோடிக்கு எடுத்துள்ளதை திரும்ப பெற வேண்டும். மாதம் ரூ.22 லட்சம் வசூல் செய்யும் நிர்வாகம் மாதந்தோறும் கணக்கு வழங்க வேண்டும். முதலீட்டாளர்களின் அனுமதி இல்லாமல் விற்கபட்ட நிலங்களை திரும்ப வழங்க வேண்டும். 

நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், முதலீட்டாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினேன், பூங்கா நிர்வாகிகள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

முதலீட்டாளர்களின் கோரிக்கையான பொது நபர்கள் 5 பேர் கொண்ட கமிட்டியை ஒரு மாதத்தில் உருவாக்கி இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து எனது போராட்டத்தை 2 மணிநேரத்தில் முடித்து விட்டேன் என்றார்.  
Tags:    

Similar News