செய்திகள்
கோப்புபடம்

மழைக்கு தாக்குப்பிடிக்காத ரோடுகள் - வாகன ஓட்டிகள் அவதி

Published On 2021-10-20 10:18 GMT   |   Update On 2021-10-20 10:18 GMT
உடுமலை நகரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ரோடுகளில் ஏற்கனவே செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழை வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்காத ரோடுகள் சேதமடைந்து வருகின்றன. உடுமலை நகரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ரோடுகளில் ஏற்கனவே செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இச்சாலைகளில் மழைநீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது மழையின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காத ரோடுகளில் ஆங்காங்கே பெரும் குழிகள் ஏற்படுகிறது. 

குழிகளில் வாகனங்கள் இறங்கி, ஏறும் போது நாளடைவில் பெரிய பள்ளமாக மாறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது இவ்வாறான அவலநிலை உருவாகிறது. இதனை உடனே சரி செய்தால் மட்டுமே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News