செய்திகள்
ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர்கள்.

திருப்பூரில் மிலாது நபி ஊர்வலம்

Published On 2021-10-19 09:19 GMT   |   Update On 2021-10-19 09:19 GMT
பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமிகள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
திருப்பூர்:

இஸ்லாமியர்களின் தலைவரான உத்தம நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபி விழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்று மிலாது நபியையொட்டி திருப்பூர் காங்கேயம் சாலை காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள ஹிஸ்னும் இஸ்லாம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் நபிகள் புகழ் பாடும் பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகள் அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுப் பிரார்த்தனை செய்து குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிலாதுநபி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Tags:    

Similar News