செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் பொதுமக்களுக்கு மூலிகை தேநீர்

Published On 2021-10-19 09:01 GMT   |   Update On 2021-10-19 09:01 GMT
முகாமை உடுமலை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் டாக்டர் ராகவேந்திரசாமி தொடங்கி வைத்து பொதுமக்கள் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
உடுமலை:

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2ல் பருவநிலை மாற்றத்தால் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க உடுமலை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் சார்பில் பொதுமக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் ,துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமை உடுமலை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் டாக்டர் ராகவேந்திரசாமி தொடங்கி வைத்து பொதுமக்கள் முககவசம் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளி குறித்து விளக்கினார். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உடுமலை உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மாணவர்கள் என 300 பேருக்கு மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. இந்த வாரம் முழுவதும் மூலிகையை தேடி வழங்கும் முகாம் அலுவலகத்தில் நடைபெறும். 

முகாமிற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் ,அஸ்ரப், சித்திகா, பகுதி நேர பணியாளர் ஈஸ்வரி மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News