செய்திகள்
கோப்புபடம்

அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒதுக்கீடு - இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிவிப்பு

Published On 2021-10-19 07:58 GMT   |   Update On 2021-10-19 07:58 GMT
அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை பெற்றுத் தருவதாக கூறி அரசியல் கட்சியினர், இடைத்தரகர்கள் பலர் மக்களிடம் பணம் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டம்  மாநகராட்சி, அவிநாசி உட்பட சில இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு நம்பகத்தன்மை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை பெற்றுத் தருவதாக கூறி அரசியல் கட்சியினர், இடைத்தரகர்கள் பலர் மக்களிடம் பணம் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

குடியிருப்புகள் வாங்கித் தருவதாக வெளி நபர்களோ, இடைத்தரகர்களோ கூறினால் அதை நம்பி பணம் எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம். அவ்வாறு பணம் கொடுத்தால் அதற்கு அரசோ, மாவட்ட நிர்வாகமோ, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமோ எவ்வித பொறுப்பும் ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News