செய்திகள்
கோப்புபடம்.

சிக்னல் செயல்படாததால் அவினாசியில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Published On 2021-10-18 07:19 GMT   |   Update On 2021-10-18 07:19 GMT
பழைய பஸ் நிலையத்திற்கு 400 மீட்டர் தொலைவில் கோபி, நம்பியூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், மைசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.
அவினாசி:

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி நகரம் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால்எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். அவினாசி போலீஸ் நிலையம் அருகில் பழைய பஸ் நிலையம், அவினாசிலிங்கேசுவரர் கோவில், தபால்நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் என ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளது. 

பழைய பஸ் நிலையத்திற்கு 400 மீட்டர் தொலைவில் கோபி, நம்பியூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், மைசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இதனால் இந்த சாலை சந்திப்பில் எந்த நேரமும் போக்குவரத்துமிகுந்து காணப்படும். எனவே இங்கு தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிக்னல் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. 

போலீசார் அங்கு இல்லாத போது நான்கு திசைகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சாலை விதிகளை மீறி தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதுடன் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். 

எனவே பழுதடைந்த நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னலைசரிசெய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
Tags:    

Similar News