செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை 43,960 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

Published On 2021-10-17 08:36 GMT   |   Update On 2021-10-17 08:36 GMT
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை அனைத்துப் பகுதியிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 303-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 74 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 524-ஆக உள்ளது.

தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 822 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 967-ஆக உள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை அனைத்துப் பகுதியிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள் என மொத்தம் 43,960 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆயிரம் பேருக்கு கோவிஷீல்ட் மற்றும் 500 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் 17 இடங்களில் கோவிஷீல்ட் 8500 பேருக்கும்,கோவாக்சின் 820 பேருக்கும் செலுத்தப்படவுள்ளது.மேலும் ஜல்லிப்பட்டி, ஊத்துக்குளி, அவிநாசி, தாராபுரம், காங்கயம், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை மற்றும் கரடிவாவி அரசு மருத்துவமனைகளில் 900 கோவிஷீல்ட், 660 கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்படும்.

அவிநாசி பகுதியில் 25 துணை சுகாதார மையங்கள், குன்னத்தூரில் 4 மையங்கள், திருப்பூர் ஒன்றிய பகுதியில் 14 மையங்கள், பல்லடம் பகுதியில் 10 மையங்கள், பொங்கலூரில் 6 மையம், குண்டடத்தில் 24 மையங்கள், காங்கயத்தில் 12 மையங்கள், வெள்ளகோவில் 4 மையம், மூலனூரில் 20 மையம், தாராபுரத்தில் 10 மையம், கணியூரில் 3 மையம், குடிமங்கலத்தில் 4 மையம், உடுமலையில் 7 மையங்கள் என மொத்த 151 மையங்களில் இம்முகாம் நடைபெறும். 

இதில் 28,150 கோவிஷீல்ட் மற்றும் 3,430 கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படும்.இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News