செய்திகள்
கோழிகளுக்கான தடுப்பூசி.

கோழிகளுக்கான தடுப்பூசி இறக்குமதி - மத்திய அரசு அனுமதி அளிக்க கோரிக்கை

Published On 2021-10-17 08:27 GMT   |   Update On 2021-10-17 08:27 GMT
பருவ நிலை மாற்றங்களால் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை தடுக்க தடுப்பூசி செலுத்த வேண்டும்.
பல்லடம்:

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் சுமார் 5 லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பருவ நிலை மாற்றங்களால் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை தடுக்க தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி வழங்காததால் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போவதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். எனவே, இதனைத்தடுக்கும் பொருட்டு, தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க, அதனை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News