செய்திகள்
பப்பாளி

உரிய விலை கிடைக்காததால் பப்பாளி சாகுபடி விவசாயிகள் கவலை

Published On 2021-10-17 08:14 GMT   |   Update On 2021-10-17 08:14 GMT
பப்பாளிபழங்கள் கடந்த சில மாதங்களாக விலை சரிந்து காணப்படுகிறது.
குடிமங்கலம்:

குடிமங்கலம் பகுதியில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ரெட்லேடி ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்டது என்பதால் விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.

குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பப்பாளி பழங்கள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று பப்பாளிகளை அறுவடை செய்துவந்தனர். தற்போது விலை சரிவு காரணமாக பப்பாளிபழங்கள் மரங்களிலே அழுகும் நிலை உள்ளது. இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது:-

பப்பாளிபழங்கள் கடந்த சில மாதங்களாக விலை சரிந்து காணப்படுகிறது. இதனால் பப்பாளி காய்களில் இருந்து பால் எடுத்து ஒரு கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்தோம். பப்பாளிபழங்கள் தற்போது விலை சரிந்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.4க்கு மட்டுமே விற்பனையாகிறது.

வியாபாரிகளை பலமுறை அழைத்தும் பப்பாளிபழங்களை அறுவடை செய்ய வருவதில்லை. இதனால் பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் உரியவிலை கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர். பப்பாளி பழங்கள் மரங்களிலேயே அழுகும் நிலை உள்ளது என்றனர்.
Tags:    

Similar News