செய்திகள்
கோப்புபடம்.

நடப்பு நிதியாண்டில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.28 ஆயிரம் கோடியை எட்டும் - தொழில் துறையினர் நம்பிக்கை

Published On 2021-10-17 07:31 GMT   |   Update On 2021-10-17 07:31 GMT
இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.
திருப்பூர்:

கொரோனாவால் கடந்த 2020 - 21ம் நிதியாண்டுக்கான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்தது. தொற்று பாதிப்பு குறைந்ததால் நடப்பு நிதியாண்டு தொடக்கம் முதலே இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெற்று வருகிறது.

நிதியாண்டின் முதல் அரையாண்டாகிய ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.26 ஆயிரத்து 706 கோடியை எட்டியுள்ளது. இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. 

அந்தவகையில் நிதியாண்டின் முதல் அரையாண்டில் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.13 ஆயிரத்து 285 கோடியை தொட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. 

இதையடுத்து ஆடை தயாரித்து அனுப்புவதில் ஏற்றுமதியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அடுத்த 6 மாதங்கள் ஆர்டர் வருகை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எனவே நடப்பு நிதியாண்டில் திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரம் கோடியை எட்டிபிடித்து விடும் என தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News