செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கோவை மாநகராட்சியில் உள்ள 6 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2021-10-16 10:25 GMT   |   Update On 2021-10-16 10:25 GMT
கோவை மாநகராட்சியில் 11,23,24,60,64,66,96 ஆகிய வார்டுகளில் 18 வயதுக்கும் மேற்பட்ட தகுதியுடைய அனைத்து பொதுமக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

கோவை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியதாக கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது.

இதில் மாநகராட்சி பகுதிகளில் 6 வார்டுகளில் 100 சதவீதம் தகுதி உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியம் வழங்கினார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் 11,23,24,60,64,66,96 ஆகிய வார்டுகளில் 18 வயதுக்கும் மேற்பட்ட தகுதியுடைய அனைத்து பொதுமக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

பிற வார்டுகளிலும் தகுதியுடைய அனைத்து பொதுமக்களுக்கும், அடுத்த சில தினங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்.மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பொதுமக்களை அணுகுதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை பின் பற்றுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட வார்டுகளில் இலக்கை எட்டியதற்கு இதுவும் முக்கிய காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் விருப்பம் இல்லாதவர்கள் தடுப்பூசி வேண்டாம் என டாக்டர்களிடம் சான்று பெற்றவர்களை கட்டாய படுத்துவது இல்லை. மேலும் வார்டுகளில் தனியார் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக நடத்தப்பட்ட முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாநராட்சி கணக்கில் வருவது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News