செய்திகள்
உடுமலை அமராவதி ஆற்றின் கரையோரம் தென்பட்ட முதலை.

அமராவதி ஆற்றில் முதலைகள் : பொதுமக்கள் அச்சம்

Published On 2021-10-16 09:53 GMT   |   Update On 2021-10-16 09:53 GMT
கடந்த சில நாட்களாக ஆற்றுக்குள் இருந்த முதலைகள் அருகில் உள்ள விளை நிலங்களில் நடமாடி வருகிறது.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து வெளியேறிய ஒரு சில முதலைகள் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் காணப்படுவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக ஆற்றுக்குள் இருந்த முதலைகள் அருகில் உள்ள விளை நிலங்களில் நடமாடி வருகிறது. இதனால் கண்ணாடிப்புத்தூர், கொமரலிங்கம், கொழுமம், மடத்துக்குளம் பகுதிகளில் பொதுமக்களிடையே முதலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என்றனர். 

வனத்துறையினர் கூறுகையில், அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் போது அணையில் உள்ள முதலைகள் மெயின் ஷட்டர் வழியாக அமராவதி ஆற்றிற்குள் சென்று விடும் நிலை வாய்ப்பு உள்ளது. 

பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். முதலைகளை ஆற்றோரம் அல்லது நிலப்பகுதியில் பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News