செய்திகள்
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.

உடுமலையில் எத்தலப்பருக்கு சிலை அமைக்க அமைச்சர்கள் ஆய்வு

Published On 2021-10-15 07:31 GMT   |   Update On 2021-10-15 07:31 GMT
சுதந்திர போராட்ட வீரர் மலையாண்டி வேங்கடபதி எத்தலப்பருக்கு தளியில் நினைவரங்கம் மற்றும் உடுமலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
உடுமலை:

சுதந்திர போராட்ட வீரர் மலையாண்டி வேங்கட பதி எத்தலப்பருக்கு தளியில் நினைவரங்கம் மற்றும் உடுமலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான இடத்தை தேர்வு செய்ய தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடுமலையில் ஆய்வு செய்தனர்.

சிலை அமைக்க உடுமலை தளி ரோடு மேம்பாலம் அருகே நகராட்சி அலுவலக வளாகம் ,உழவர்சந்தை ஆகிய 2 இடங்கள் பார்வையிட்டனர்.

இதில் ஒரு இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக நகராட்சி திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இதில் அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் வினீத் ,செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், வருவாய் கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம் ,வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் இல. பத்மநாபன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் மத்தின் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News