செய்திகள்
படகுகள் கரையில் நிறுத்தம்

18 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை - படகுகள் கரையில் நிறுத்தம்

Published On 2021-10-15 06:38 GMT   |   Update On 2021-10-15 06:38 GMT
நெல்லை, தூத்துக்குடியில் தடை காரணமாக மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

பணகுடி:

குமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றானது 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் நாளை (16-ந் தேதி) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், படகுகளை பத்திரமாக கடற்கரையில் நிறுத்தி வைக்கவும் ராதாபுரம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூந்தங்குழி, பஞ்சல், தோமையார்புரம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் 10 மீனவ கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 2 ஆயிரம் நாட்டு படகுகள் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப் பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக் காயல், மணப்பாடு, பெரிதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். தடை காரணமாக அவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News