செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது

Published On 2021-10-15 06:22 GMT   |   Update On 2021-10-15 06:22 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து பவுனுக்கு ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,515-க்கு விற்பனையாகிறது. இதுவே பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.67.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூ.300 உயர்ந்து ரூ.67700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News