செய்திகள்
அண்ணாமலை

வார இறுதி நாட்களில் கோவில்கள் திறக்க அனுமதி: முதலமைச்சருக்கு நன்றி - அண்ணாமலை

Published On 2021-10-15 04:27 GMT   |   Update On 2021-10-15 04:42 GMT
மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோவில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசை பாராட்டி வரவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தை தொடங்கும் வணிக பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கமுடைய மூத்த குடிமக்களுக்கும், தினப்படி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த கோவில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 7-ந் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களோடு இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினர்.

சென்னை மண்ணடியில் தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோவிலில் நானும் போராட்டம் நடத்தி பேசுகையில் இன்னும் 10 நாட்களில் கோவில்களை எல்லா நாட்களிலும் கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறி இருந்தேன்.

திருவிழா நாட்களில் எல்லாம் கோவில்கள் மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோவில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறோம்.


மக்களின் உண்மையான எண்ணங்களை பிரதிபலிக்கும், எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் கோவில்களை திறக்க அனுமதிஅளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம்: கமல் ஹாசன்

Tags:    

Similar News