செய்திகள்
கடை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன?

Published On 2021-10-14 11:18 GMT   |   Update On 2021-10-14 11:18 GMT
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள், தனியார் பொருட்காட்சிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தளர்வுகள் வருமாறு:-

*  தனியார் நிறுவனங்கள் நடத்தும்  பொருட்காட்சிகளுக்கு அனுமதி

* நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்



* இன்று முதல் அனைத்து விதமான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படலாம்

* டியூசன் சென்டர், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று முதல் செயல்படலாம்

* நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம்

* இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்கலாம்

* நவம்பர் முதல், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களுக்கு அனுமதி

* நவம்பர் 1 முதல், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைகளுக்கு செல்லலாம்

*  நவம்பர் 1 முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் இயங்க அனுமதி.
Tags:    

Similar News