செய்திகள்
கேபி முனுசாமி

தி.மு.க. ஆட்சி சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று கூற முடியாது- கே.பி.முனுசாமி கருத்து

Published On 2021-10-13 08:34 GMT   |   Update On 2021-10-13 09:41 GMT
அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். இதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை:

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. தி.மு.க. ஆட்சி புதிதாக வந்துள்ளது. அந்த சிந்தனையில் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களித்து இருக்கலாம்.

அதற்காக 5 மாத தி.மு.க. ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று கூற முடியாது. உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பல்வேறு காரண காரியங்கள் உள்ளன.

உள்ளூர் மக்களின் மன நிலையை பொறுத்து வெற்றி- தோல்வி அமையும். தி.மு.க.வின் 5 மாத ஆட்சியில் புதிதாக எதுவும் இல்லை. பெண்களுக்கு மாநகர பஸ்களில் இலவச பயணம் என்ற திட்டம் மட்டும்தான் புதிது. மற்றபடி வேறுஎதுவும் சொல்வதற்கில்லை.

 


அ.தி.மு.க.வை பொறுத்த வரை நாங்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்பதையே இந்த தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். இதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வரும் காலங்களில் அ.தி.மு.க. எப்போதும் போல் வீறு நடைபோடும். கட்சியின் நிர்வாகிகளும் வேகமாக செயல்படுவார்கள்.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

இதையும் படியுங்கள்... தி.மு.க. எம்.பியை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிபதி அனுமதி

Tags:    

Similar News