செய்திகள்
வாக்கு எண்ணிக்கை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - திமுக தொடர்ந்து முன்னிலை

Published On 2021-10-12 21:53 GMT   |   Update On 2021-10-12 21:53 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. 

இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இரவு 2 மணி வரையில் வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 5 இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

இதேபோல், 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 578 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 103 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News