செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அருகே ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

Published On 2021-10-12 07:04 GMT   |   Update On 2021-10-12 07:04 GMT
மாணவர்களுக்கு பாடத்தில் உள்ள கருத்து கடின பகுதிகளை எளிதில் புரியும் வகையில் காணொளியாக தயாரிக்க வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது.
உடுமலை:

உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 3-ம்வகுப்பு ,10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள கருத்து கடின பகுதிகளை கண்டறிந்து அவற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் காணொளியாக தயாரிக்க வழிகாட்டுதல் பயிற்சி  நடந்தது.

இதற்கு பயிற்சி பள்ளி முதல்வர் சங்கர் தலைமை வகித்தார். துணை முதல்வர் இந்திராதேவி, விரிவுரையாளர்கள் சரவணகுமார், பாபி, இந்திரா ,சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் காணொளி தயாரித்தல் பற்றி பேசினார். முடிவில் விரிவுரையாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News