செய்திகள்
கோப்புபடம்.

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி தீவிரம்

Published On 2021-10-12 07:02 GMT   |   Update On 2021-10-12 07:02 GMT
தற்போது 950க்கும் மேற்பட்ட அனுமதியற்ற இணைப்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அவிநாசி:

திருப்பூர் திருமுருகன்பூண்டி பேருராட்சியில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகளை முறைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட அனுமதியற்ற இணைப்புகள் துண்டிக்கப்பட்டு முறைப்படுத்தும் கட்டணமாக ரூ.1கோடி வசூலிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இப்பணி  தொடங்கியுள்ளது. 

தற்போது 950க்கும் மேற்பட்ட அனுமதியற்ற இணைப்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக குழாய் இணைப்பை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது. 

முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களிடம் இருந்து முறைப்படுத்தும் கட்டணமாக ரூ. 27 ஆயிரத்து 637 வசூலிக்கப்படுகிறது. கடந்த 10 நாளில், மொத்தம் 40 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
Tags:    

Similar News