செய்திகள்
தென்னம்பாளையம் மார்க்கெட்.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் நேரம் மாற்றம்

Published On 2021-10-12 06:54 GMT   |   Update On 2021-10-12 06:54 GMT
கொரோனா பரவல் காரணமாக ஒரே நேரத்தில் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரள்வதை தடுக்க தென்னம்பாளையம் மார்க்கெட் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் இனி இரவில் செயல்படாது. அதிகாலை, பகலில் மட்டும் வியாபாரிகள், விவசாயிகள் வர வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொரோனா பரவல் காரணமாக ஒரே நேரத்தில் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரள்வதை தடுக்க தென்னம்பாளையம் மார்க்கெட் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது. மாலை 6மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை காய்கறி விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது. விடிய விடிய காய்கறி விற்பனை நடந்தது.

மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தவாறு மார்க்கெட் நேரம் மாற்றப்பட உள்ளது. அதன்படி இன்று முதல் இனி வரும் நாட்களில் அதிகாலை 3 மணி  முதல் மதியம் 2 மணி வரை மார்க்கெட் செயல்படும். இரவில் மார்க்கெட்டுக்குள் இனி விவசாயிகள், வியாபாரிகள் வரக்கூடாது. 

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வந்து காய்கறி விற்பனை செய்ய வேண்டும். மேற்கண்ட நேரத்தில் மட்டும் வாடிக்கையாளர் வந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News