செய்திகள்
கொரோனா வைரஸ்.

மாணவி பாதிக்கப்பட்டதால் பல்லடம் பள்ளியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்

Published On 2021-10-10 10:19 GMT   |   Update On 2021-10-10 10:19 GMT
பள்ளியில் படிக்கும், 580 மாணவிகளுக்கும் தொற்று பரிசோதனை நடந்துள்ளது.
பல்லடம்:

பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 580 மாணவிகள்  படிக்கின்றனர். கல்வித்துறை உத்தரவின் பேரில் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினசரி காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா தொற்று பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது. 

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறுகையில், அரசு பெண்கள் பள்ளியில் மாணவி ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து பள்ளியில் படிக்கும், 580 மாணவிகளுக்கும் தொற்று பரிசோதனை நடந்துள்ளது. அதன் முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.

தொடர்ந்து, மாணவிகள் கண்காணிக்கப்படுவர்கள். பள்ளியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News