செய்திகள்
கலெக்டர் வினீத் ஆய்வு செய்த காட்சி.

பல்லடம் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2021-10-09 08:52 GMT   |   Update On 2021-10-09 10:21 GMT
சொத்து வரியிலிருந்து கல்வி வரி இனம் பிரிக்கப்படாமல் உள்ளது குறித்து கலெக்டர் பணியாளர்களிடம் சுட்டிக் காட்டினார்.
பல்லடம்:

பல்லடம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள், எதிர்வரும் வட கிழக்குப் பருவ மழையை முன்னிட்டு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், கொரோனா தொற்று தடுப்பு பணிகள், உள்ளிட்டவைகள் குறித்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் மற்றும் செலவினங்கள் வரிவசூல் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். இதில் சொத்து வரியிலிருந்து கல்வி வரி இனம் பிரிக்கப்படாமல் உள்ளது குறித்து சுட்டிக் காட்டினார். 

மேலும் பொது மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு இருப்பிலுள்ள மழை நீர் கட்டமைப்பு, முன்வைப்புத் தொகையை கொண்டு  நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். 

பொதுமக்கள் நலன் கருதி பல்லடம் அரசு பொது மருத்துவமனையில் நகராட்சி தூய்மையாக பணியாளர்களை கொண்டு வாரம் இருமுறை தூய்மைப்படுத்தவும் உத்தரவிட்டார். 

தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் விநாயகம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News