செய்திகள்
மழை

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-10-09 08:09 GMT   |   Update On 2021-10-09 09:42 GMT
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும்.

இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

10-ந்தேதி: நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

11-ந்தேதி: நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


12, 13-ந்தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் வலங்கைமான் 5 சென்டி மீட்டர், திருபுவனம், ஆண்டிமடம் தலா 4 செ.மீ.யும் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News